சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!

0 3083

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் மழை குறைந்ததை அடுத்து, பம்பையில் தண்ணீர் சீராக செல்வதால் தடை நீக்கப்படுவதாக ஆட்சியர் திவ்யா அறிவித்தார்.

எனினும் பம்பை ஆற்றில் குளிக்க தடை தொடர்வதாகவும், இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கு அனுதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments