பிரதமர் விவசாயிகளின் நண்பன்: 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து

0 2214

மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பிரதமரின் பெருந்தன்மையைக் காட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களால் விளைபொருள் விற்பனையில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும், நிலங்கள் பறிபோய்விடும், குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காது என்றெல்லாம் தெரிவித்து விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற்றுள்ளது விவசாயிகள் மீது பிரதமருக்குள்ள அக்கறையை வெளிக்காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments