''வலிமை'' என்ற பெயரிலான புதிய வகை சிமெண்ட் அறிமுகம்

0 2827

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வலிமை என்ற பெயரில் உயர்தர புதிய ரக சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி விற்பனையை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அரியலூரில் செயல்பட்டு வரும் 3 ஆலைகளிலும் ஆண்டொன்றுக்கு மொத்தமாக 17லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வலிமை என்ற பெயரிலான புதிய ரக சிமெண்ட்டை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். தரத்தின் அடிப்படையில், இரண்டு ரகமாக விற்பனை செய்யப்படும் இந்த வலிமை சிமெண்ட்டின் விலை 350 ரூபாய் மற்றும் 365 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாதத்திற்கு 30ஆயிரம் மெட்ரிக் டன் வலிமை சிமெண்ட் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பிறகு தேவை அடிப்படையில் உற்பத்தி அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments