வில் ஸ்மித் நடித்த 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி ; செரினா, வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

0 3685
வில் ஸ்மித் நடித்த 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி

பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான செரினா மற்றும் வீனஸ் வில்லியம்சின் தந்தையான ரிச்சர்ட் வில்லியம்சின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'கிங் ரிச்சர்ட்'  திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி, அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் திரை விழாவில் நடைபெற்றது.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், செரினா, வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய வீனஸ் வில்லியம்ஸ், இத்திரைப்படத்தை பார்த்தபோது உணர்ச்சிவயப்பட்டு கண்கலங்கியதாக தெரிவித்தார். 'கிங் ரிச்சர்ட்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளிலும், HBO Max தளத்திலும் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments