முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை, வினாடிக்கு 40ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

0 1873

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அங்கிருந்து வினாடிக்கு 40ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34ஆயிரம் கன அடி வீதமாக உள்ளது.

பாதுகாப்பு கருதி, மேட்டூர் அணையில் இருந்து அதிக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால், செக்கானூர், பூலாம்பட்டி, தேவூர் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments