கன்னியாகுமரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் இன்று ஆய்வு

0 1781

கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, வள்ளியாறு, பழைய ஆறு சிற்றார் அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீரால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஆற்று வெள்ளம் அதிகரித்ததாலும், மழை நிற்காததாலும் சுமார் 150 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அருமநல்லூர், சுசீந்திரம், தேரூர், காட்டுப்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இந்நிலையில், வெள்ளப் பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிடுகிறார். தோவாளை, தேரேகால் புதூர் உள்ளிட்ட இடங்களில் கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

பேச்சிப்பாறை அணையைப் பார்வையிட்ட பின், மணவாளக்குறிச்சி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் நீரில் மூழ்கிய பயிர்களையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

இன்று பிற்பகலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments