சுங்க கட்டணம் செலுத்த முடியாது - சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டம்

0 5774

மதுரை அருகே உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறி, சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றி உள்ள திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளைச் சேர்ந்த வாகனங்கள் அடிக்கடி சுங்கச்சாவடியை கடக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் எனவே அவர்களுக்கு சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு வேண்டும் என்றும் பல காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.

அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கன்னியாகுமரி, தென்காசி, சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், கேரளா சென்ற வாகனங்களும் அவ்வழியாக மதுரை வந்த வாகனங்களும் நீண்ட நேரம் சாலையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சுங்கச்சாவடி தரப்பில் ஒரு வார காலம் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments