தியாகராய நகரில், வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணிகள் தீவிரம்

0 1738

தொடர் மழை காரணமாக சென்னை தியாகராய நகர் பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீர் 6-வது நாளாக வடியாமல் நிற்கும் நிலையில், நீரை வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

பசுல்லா சாலை, திருமூர்த்தி சாலை, ஜி.என்.செட்டி சாலை, குப்புசாமி தெரு ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவு நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், ராட்சத மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றி சாலைகளை சீரமைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments