ரபேல் சர்ச்சை இடைத்தரகர்களுக்கு ரூ 110 கோடி தரப்பட்டதா? ஊழல் தெரிந்தும் சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை -பிரான்ஸ் ஊடகம் புகார்

0 2716

ரபேல் விவகாரத்தில் இடைத்தரகர்கள் மூலம் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக புதிய சர்ச்சை வலுத்து வரும் நிலையில் ஊழல் பற்றி தெரிந்தும் சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரான்ஸ் நாட்டின் மீடியாபார்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் 110 கோடி ரூபாய்  தொகையை இடைத்தரகர் சுஹேன்குப்தாவுக்கு  ரபேல் விமான பேரத்தை முடிக்க லஞ்சமாக தந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே பாஜகவும் காங்கிரசும் மாறி மாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் அதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் ரபேல் ஒப்பந்தங்கள் குறித்த அரசியல் சொற்போர் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments