நீர்வீழ்ச்சியில் குளித்த பள்ளி மாணவனை ட்ரோன் மூலம் தேடும் பணி 3வது நாளாக நீடிப்பு

0 2210

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவனை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அருகே கல்வராயன் மலையில் உள்ள சிறுவலூர் நீர்வீழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான பள்ளி மாணவன் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாக சிறுவனைத் தேடி வந்தனர்.

இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் நேற்று சங்கராபுரம் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் சிறுவனைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments