நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

0 2664

தென்கிழக்கு வங்க கடலில் வருகிற 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களுக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரை திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால், பொது மக்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகளுக்கு மிக அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments