முல்லைப் பெரியாறு அணையின் 6 மதகுகள் வழியாகக் கேரளத்தின் இடுக்கி அணைக்கு தண்ணீர் திறப்பு

0 1869
முல்லைப் பெரியாறு அணையின் 6 மதகுகள் வழியாகக் கேரளத்துக்குத் தண்ணீர் திறப்பு

முல்லைப்பெரியாறு அணையின் 6 மதகுகள் வழியாகக் கேரளத்தின் இடுக்கி அணைக்கு நொடிக்கு 2974 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு ஏற்கெனவே 3 மதகுகளைத் திறந்து அவற்றின் வழியாக 1675 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதற்குத் தமிழக விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், சனியன்று மேலும் 3 மதகுகளைத் திறந்து கேரளத்தின் இடுக்கி அணைக்குத் தண்ணீர் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 6 மதகுகள் வழியாகவும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 2974 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறி, கேரள தரப்பில் வீடியோவும் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments