4 ஆவது முறையாக நீட் தேர்வெழுதிய மாணவன் தோல்வி பயத்தால் விஷம் அருந்தி தற்கொலை - போலீசார் விசாரணை

0 2148
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்து, 4ஆவது முறையாக தேர்வெழுதிய மாணவன் தோல்வி பயத்தால் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு முத்தூரை சேர்ந்த 20 வயதான கீர்த்திவாசன் 2018ஆம் ஆண்டு  12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த நிலையில், 4ஆவது முறையாக கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு எழுதினார்.

இந்நிலையில், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவர், நீட் தேர்வில் தோல்வியுறக் கூடும் என எண்ணி மருந்தை குடித்துவிட்டதாக தனது தாயாரிடம் கூறியதாக, சொல்லப்படுகிறது.

இதையடுத்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர், மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூருக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments