ஹைதராபாதில் வாகன சோதனை நடத்திய போலீசார் மொபைல் போன்களை ஆராய்ந்ததால் சர்ச்சை

0 3708

ஹைதராபாதில் போதைப் பொருள் பயன்படுத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது சாலையில் தடுப்பு அமைத்து அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி பலரது மொபைல் போன்களை போலீசார் சோதனையிட்டது சர்ச்சையை எழுப்பியது.

போலீசார் மொபைலில் தனி நபர் தகவல்களை ஆராய்ந்தது குறித்து சமூக ஊடகங்கள் கேள்வி எழுப்பின.நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எதன் அடிப்படையில் போலீசார் தனி மனித உரிமையில் தலையிடலாம் என்று பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.

ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் கஞ்சாவை வாங்க கூகுள் பேயை பயன்படுத்தியதாக காவல்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments