இந்திய அரசியலில் இன்னும் பல தசாப்தங்களுக்கு வல்லமை மிக்க கட்சியாக பாஜக தொடரும் - பிரசாந்த் கிஷோர்

0 16548

இந்திய அரசியலில் இன்னும் பல தசாப்தங்களுக்கு, பாஜக வல்லமை மிக்க  கட்சியாக திகழும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் 40 ஆண்டு காலம் காங்கிரஸ் எப்படி வலுவடைந்ததோ அதேபோல், தேர்தலில் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி, இந்திய அரசியலில் சக்திவாய்ந்த கட்சியாக பாஜக இருக்கும் என கூறினார்.

மேலும், மக்களிடையே பிரதமர் மோடிக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்தால் மட்டுமே அவரை எதிர்கொள்வதற்கான திட்டத்தை செயல்படுத்த முடியும் என பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் செல்வாக்கு காலப்போக்கில் சரிந்துவிடும் என ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாயையில் உள்ளதாகவும், ராகுல்காந்தி நினைப்பது நடக்கப்போவதில்லை என்றும் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments