பிரான்ஸில் ஃபேஸ்புக்-ல் வெளியாகும் செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு உரிமக் கட்டணம் வழங்கும் ஃபேஸ்புக் நிறுவனம்

0 5189

பிரான்ஸில் ஃபேஸ்புக்-ல் வெளியாகும் செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு உரிமக் கட்டணம் வழங்கும் ஒப்பந்தத்தை செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு செய்திக்கும் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியிடப்படாத நிலையில், பிரான்ஸின் முன்னணி நாளிதழ்கள் சார்பில் செயல்படும் APIG எனப்படும் செய்தி தரக நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தை ஃபேஸ்புக் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஃபேஸ்புக்-ன் பிரதான தளத்தில் வெளியிடப்படும் செய்திகளுக்காக செய்தி நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் கட்டணம் வழங்குவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி நிறுவனங்களில் இருந்து வெளியாகும் செய்திகளை பதிவிட ஃபேஸ்புக் புதிதாக உருவாக்கி வரும் Facebook News service பிரத்யேக தளத்தில் பதிவிடப்படும் செய்திகளுக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் கட்டணம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments