விவசாயிகளுக்கு போராட உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து

0 1676

விவசாயிகளுக்கு போராட உரிமை உள்ளது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம் அதற்காக சாலை மறியல் போராட்டம் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளை ஜந்தர் மந்தர் அல்லது ராம்லீலா மைதானத்தில் போராட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஷாகீன் பாக் போராட்டத்தை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், விவசாயிகளுக்கு போராட அனுமதி உண்டு என்று கூறி அதற்காக சாலைகளை மறிப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து வழக்கை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments