சீனா: உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து-3 பேர் பலி, 30 பேர் படுகாயம்

0 1523

சீனாவில் உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

லியான்னிங் மாகாணத்தின் ஷென்யாங் தெருவில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகங்கள் நிறைந்த அந்த தெருவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மற்ற கட்டிடங்களும் சேதமடைந்தன. சிலிண்டர் வெடித்து விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியேறிய காட்சிகளும், அங்கிருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பதறியடித்து ஓடியக் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments