விரைவில் 100 கோடி டோஸ்கள் தடுப்பூசி இலக்கை எட்டுகிறது இந்தியா

0 1625

இந்தியா விரைவில் தனது 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்ட உள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரமாகக் குறைந்துள்ளது. கடந்த 231 நாட்களில் இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் ஓரிரு மாநிலங்களைத் தவிர கொரோனா பாதிப்பு மிக அதிகளவில் குறைந்துள்ளது. இதற்கு இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசி இயக்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது. நேற்றிரவு 7 மணி நிலவரப்படி ஒரே நாளில் 37 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 99 கோடியை கடந்து விட்டது. நூறு கோடி இலக்கை எட்ட உள்ளநிலையில் நூறாவது கோடி டோஸ் யாருக்கு என்பதில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனை ரயில்கள், விமானங்கள், பொது இடங்களில் பிரமாதமான முறையில் அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments