சென்னையில் சாலையை கடக்க முயன்ற எஸ்.ஐ விபத்தில் சிக்கி உயிரிழப்பு

0 2491

சென்னையில் சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

காவல்துறையில் தொழில்நுட்பப் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த விழுப்புரத்தை சேர்ந்த பிரசன்னா, காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த மஹிந்திரா எக்ஸ்.யூ.வி கார் பிரசன்னா மீது மோதி அவரை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உதவி ஆய்வாளர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த வடபழனி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments