பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு ரூ.4.96 லட்சம் அபராதம்

0 1452

சென்னை மாநகராட்சி பூங்காக்களின், பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு 4 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொடர்ந்து பராமரிப்பு பணியில் குறை இருப்பின் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரித்துள்ளது.

மாநகராட்சி பூங்காத்துறை சார்பில் 704 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இதில் 540 பூங்காக்கள் பராமரிப்பு பணிக்காக தனியார் வசம் ஒப்படைக்க பட்டது.

பூங்காத்துறைச் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பராமரிப்பு பணிகளை கையாளத ஒப்பந்த நிறுவனங்களுக்கு, 31.07.2021 முதல் 16.10.2021 வரை ரூ.4.96 லட்சம் அபராதம் விதித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments