வடமாநிலங்களில் துர்காஷ்டமி வழிபாடு..!

0 1967

நவராத்திரி பண்டிகையையொட்டி, வடமாநில கோவில்களில் துர்கா அஷ்டமி சிறப்பு ஆரத்திகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் களை கட்டியிருந்தன.

நவராத்திரியின் எட்டாம் நாளான நேற்று துர்காஷ்டமியை முன்னிட்டு பல்வேறு வட மாநில ஆலயங்கள் விழாக் கோலம் பூண்டன. மேற்கு வங்கத்தின் ஆசன்சோல் பகுதியில் துர்க்கை பூஜையின் போது சிறப்பு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த நவராத்திரி பூஜை பந்தலில் பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்து நவராத்திரியைக் கொண்டாடினர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் நவராத்திரி உமையாதாம் கோவிலில் மகா ஆரத்தி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கைகளில் தீபம் ஏந்தி ஆரத்தியில் கலந்துக் கொண்டனர்.

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் புகழ்பெற்ற மணல்சிற்பியான சுதர்சன் பட்நாயக் காய்கறிகளைக் கொண்டு 5 அடி உயரத்தில் மணல் சிற்பம் ஒன்றை துர்க்கா பூஜைக்காக படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments