எந்த கட்சிக்கு ஓட்டு போடலாம்?.. வடிவேலு பட காமெடி பாணியில் அனைத்து சின்னத்திற்கும் ஓட்டு போட்ட நபர்..!

0 3952
வடிவேலு காமெடி பட பாணியில் அனைத்து சின்னத்திற்கும் ஒரு ஓட்டு

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில், வடிவேலு பட காமெடி பாணியில் நபர் ஒருவர் அனைத்து சின்னங்களுக்கும் பாரபட்சமின்றி வாக்களித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாக்குகள் எண்ணப்பட்ட போது வடிவேலு காமெடியில் “தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து” என சொல்வது போல, நபர் ஒருவர் வாக்கு சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து சின்னங்களுக்கும் வாக்களித்திருந்தார்.

இதனால் அது செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் இந்த மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments