ஆர்யன் கானின் ஜாமின் மனு வரும் புதன்கிழமை விசாரிக்கப்படும் -நீதிபதி

0 2868

ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் 3 ஆவது முறையாக தாக்கல் செய்த மனுவிலும் உடனடியாக ஜாமீன் கிடைக்கவில்லை.

சொகுசு கப்பலில் போதை மருந்து பயன்படுத்தியதாக பதிவான வழக்கில் ஒரு வாரத்திற்கு முன்பு கைதான ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று அவரது தரப்பில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட போது,பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும், ஆர்யன் கானின் காவலை வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்க வேண்டும் எனவும் போதை தடுப்புப் பிரிவு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை அடுத்து,வரும் புதன் கிழமைக்குள் பதிலை தாக்கல் செய்யுமாறு போதை தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்று ஆர்யன் கானின் ஜாமின் மனு குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments