சாமி சிலையை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0 6290
சாமி சிலையை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாமி சிலையை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடம்பூர் மலை உச்சியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கம்பத்துராயன் கிரி பெருமாள் கோயிலுக்குள் மதுபோதையில் சென்ற 4 இளைஞர்கள் சூலாயுதத்தை எடுத்து ஆடியபடி சாமி சிலைகளை அவமதித்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ வெளியானதை அடுத்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மீதமுள்ள 3 பேரையும் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு செய்ய கோரி கிராம மக்கள் கடம்பூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு எஸ்.பி. சசிமோகன் உறுதியளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments