திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

0 1513

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மகாவிஷ்ணு வாகனமான கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட மஞ்சள் துணி எடுத்து வரப்பட்டு கோயில் வளாகத்திலுள்ள தங்க கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனையடுத்து தங்க கொடி மரத்தில் உள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, மீன லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கபடாத நிலையில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments