போர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனம் திட்டம்

0 12133
போர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனம் திட்டம்

சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள போர்டு கார் தயாரிக்கும் நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தாண்டு ஜூன் மாதத்துடன் சென்னையில் உள்ள ஆலையில் இருந்து உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக ஃபோர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் சந்தித்து பேசினார்.

ஃபோர்டு நிறுவனத்தை டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்குவது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. டாடா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், சென்னையை அடுத்த சிறுசேரியில் டிசிஎஸ் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments