கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்குதல் குறித்த வழக்கு, எந்த மாநிலமும் இழப்பீடு வழங்க மறுக்கக்கூடாது - உச்ச நீதிமன்றம்

0 1535

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதை எந்த மாநிலமும் மறுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்த விசாரணையின் போது உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கொரோனா இறப்பு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 30 நாட்களில் மாநிலங்களின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் மாவட்ட அளவிலான குழுக்கள் இறப்புச் சான்றிதழ் தொடர்பான குறைகளைக் கையாளும் என்றும்,எதிர்கால கொரோனா இறப்புகளுக்கும் இழப்பீடு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments