மசினக்குடி வனப்பகுதியில் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு

0 4685
மசினக்குடி வனப்பகுதியில் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு

நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் தேடப்பட்டு வரும் ஆட்கொல்லி புலி இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்கொல்லி புலியை பிடிக்க 10வது நாளாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கும்கி யானைகள் சீனிவாசன் மற்றும் உதயன் ஆகிய இரு யானைகள் மீது அமர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவர்கள் குழு காட்டுக்குள் சென்றுள்ளனர்.

இந்நிலையில், 10 வது நாளின் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் சத்தியமங்கலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் டைகர் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் வனப்பகுதிக்குள் ஆட்கொல்லி புலி இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments