தரமற்ற விதை நெல் விற்பனை செய்த கடையின் உரிமம் ரத்து..

0 1902
தஞ்சை மாவட்டத்தில் தரமற்ற விதை நெல் விற்பனை செய்து விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுத்திய விதை நெல் விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் தரமற்ற விதை நெல் விற்பனை செய்து விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுத்திய விதை நெல் விற்பனையாளரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 

பூதலூர், அய்யனார்புரம், மாரனேரி உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தஞ்சையில் உள்ள ஸ்ரீ ஏகௌரி அம்மன் டிரேடர்ஸ் என்ற உர விற்பனை கடையில் ADT36 என்ற ரகத்தை சேர்ந்த விதை நெல் வாங்கி நடவு செய்தனர்.

இந்நிலையில், அறுவடைக்கு தயாராக வேண்டிய காலத்தில் பயிர்கள் பருவம் வராததால் விவசாயிகள் விற்பனையாளரை கேட்டபோது அவர், தவறாக விதை நெல் கொடுத்துவிட்டதாகவும், மாற்று விதை தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் விற்பனை சான்று வழங்கிய வேளாண்துறையினர் ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து  விதை சான்று வேளாண் உதவி இயக்குனர் வித்யா பாதிக்கப்பட்ட விளை நிலைங்களை நேரில் சென்று பார்வையிட்டு நெல் கதிர்களை ஆய்வு செய்தார்.

விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் தரமற்ற விதை நெல் விற்பனை செய்த கடையின் உரிமத்தை ரத்து செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments