ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்.. இன்று மாலையுடன் நிறைவு

0 2522

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடந்தது. 

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 24,416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

6-ம் தேதியன்று, முதல்கட்டத் தேர்தல் நடக்கும் 39 ஒன்றியங்களில், இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதன்பிறகு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும்  பகுதிகளில் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகளை திறக்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments