பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாடம் நடத்தியபோது, வகுப்பறையில் ஒழுங்கீனமாக ஆட்டம் போட்ட 3 மாணவர்கள் நீக்கம்

0 4829

நாமக்கல் அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, கேலி கிண்டலுடன் ஆட்டம் போட்ட மாணவர்கள் 3 பேர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னீர்செல்வம் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் வரலாற்று பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, சிலர் பாடத்தை கவனிக்காமல் கேலி செய்து ஆட்டம் போட்டனர். இதனை அங்கிருந்த மற்றொரு மாணவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, ஆசிரியர் பாடம் நடத்தும் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்களை அழைத்து பேசி மாணவர்கள் 3 பேருக்கும் டீ.சி. வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments