நெல்லையில் இருதரப்பு பள்ளி மாணவர்களிடையே மோதல்

0 21064

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இருதரப்பினராக மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள செயிண்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர், பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது சாலைகளில் இருதரப்பினராக தாக்கிக் கொண்டனர்.

கற்களாலும், தடிகளாலும் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்ட காட்சிகள் வெளியான நிலையில், மோதலுக்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments