ஆடைகளின்றி ஷோரூம்க்குள் புகுந்து கொள்ளையடித்த விசித்திர ஆசாமி..!

0 4524

கோவையில் ஆடைகள் இல்லாமல் ஷோரூம்க்குள் புகுந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த விசித்திர ஆசாமியை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் பகுதியில் இயங்கி வரும் டூவீலர் ஷோரூமுக்குள், ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அவன், கல்லாப்பெட்டியை தனியாக உடைத்தெடுத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றான். கடந்த மாதம் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த ஆசாமியை தேடி வந்த போலீசார், சிங்காநல்லூரில் பதுங்கியிருந்த போது சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அவன் மீது 15-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்த நிலையில், ஆடையை வைத்து போலீசார் அடையாளம் கண்டு பிடித்து விடுவார்கள் என நினைத்து ஆடையில்லாமல் கொள்ளை அடிப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments