ரூ.10 கோடி மதிப்பில் அவசர கால தாய், சேய் நல சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 1907

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசர கால தாய், சேய், நல சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


200 படுக்கை வசதிகளுடன் நவீன மருத்துவ உபகரணங்களுடன் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, முதலமைச்சர் ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைக்கான வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர், தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 7 ஊராட்சிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments