இரண்டு கிட்னியும் செயலிழந்து உயிருக்கு போராடி வரும் சிறுமிக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2636

இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் உயிருக்கு போராடி வரும் சேலத்தை சேர்ந்த சிறுமிக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

ஜனனி என்ற அந்த 14 வயது சிறுமி, தன்னை காப்பாற்ற உதவக் கோரி முதலமைச்சருக்கு வீடியோ மூலம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இதனையறிந்த முதலமைச்சர் உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு சிறுமிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சிறுமியின் தாயார் மற்றும் சிறுமியிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தைரியமாக இருக்குமாறு ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் தன்னிடம் பேசியது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய சிறுமி ஜனனி, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments