அசாமில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்... போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு

0 1800

அசாமில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

டர்ரங்க் மாவட்டம் சிபஜ்கர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைத்திருந்த 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வெளியேற்றும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் ஆக்கிரமிப்பாளர்களை கலைக்கும் நோக்கத்தோடு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனிடையே அரசு புகைப்படக்காரர் ஒருவர் போராட்டம் நடத்தி காயம் அடைந்த நபர் மீது ஏறி மிதிக்கும் வீடியோ காட்சி வைரலானதால், அந்த புகைப்படக் காரர் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments