வி.கே.சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

0 1635
வி.கே.சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து

சென்னையை அடுத்த பனையூரில் சாலை விரிவாக்கத்திற்காக வி.கே.சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சாலை விரிவாக்க திட்டத்திற்கு அந்த நிலம் அவசியமானது என்றும், உரிய இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சசிகலா தரப்பில் நில இழப்பீடு தொடர்பாக எந்த ஒரு நோட்டீசும் வரவில்லை என்றும், எனவே நிலம் கையப்படுத்தும் நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவின் நிலத்தின் ஒருபகுதியை கையகப்படுத்தும் உத்தரவை ரத்து செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments