திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை... பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

0 2112

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆம்பூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்தது. அதன் காரணமாக வாணியம்பாடி பாலாற்றிற்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆம்பூர் பச்சகுப்பம் மேல்பட்டி செல்லும் பாதையில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் மேல்பட்டி வழியாக குடியாத்தம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments