அடுத்தடுத்து 6 ஏ.டி.எம். இயந்திரங்களில் கொள்ளை முயற்சி.. மர்ம நபர் போலீசில் சரண் - போலீசார் தீவிர விசாரணை

0 1288

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அடுத்தடுத்து 6 ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர், அந்த முயற்சி தோல்வியடைந்ததால் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்த சேஷாத்திரி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு மதுபோதையில், பிரகாஷ் நகர் முதல் திருநின்றவூர் வரை சிடிஎச் சாலையில் உள்ள  எஸ்பிஐ, கனரா, ஆக்சிஸ் உள்ளிட்ட 6 ஏடிஎம் இயந்திரங்களை சுத்தியலால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க தெரியாததால் கையில் இருந்த சுத்தியுடன் திருநின்றவூர் காவல்  நிலையத்தில் சரணடைந்தார். திட்டமிட்டு கொள்ளை அடிக்க முயன்றாரா ? அல்லது தொழில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனநலம் பாதிக்கப்பட்டதில் இவ்வாறு நடந்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments