வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை அமோகம்.... கஞ்சா வியாபாரி கைது

0 1645

சென்னை கே.கே.நகரில் மது போதையில் ரகளை நடப்பதாக கிடைத்த தகவல் குறித்து விசாரிக்க சென்ற போலீசார் கஞ்சா வியாபாரி கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விஜயராகவபுரம் பகுதியில் ரகளை நடப்பதாக விசாரிக்க சென்ற போலீசார், கஞ்சா போதையில் இருந்ததாக சரத் என்பவரை பிடித்து விசாரித்ததாகவும், அவரது வீட்டை சோதனையிட்டதில் 6 கிலோ கஞ்சா கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கைதான சரத்திடம் விசாரணை நடத்தி நிலையில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வட மாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்ய வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததாக தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments