காதலிப்பதாகக் கூறி 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை.. 22 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

0 1598

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாகக் கூறி சென்னைக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னதுரை கைது செய்யப்பட்டான்.

கடந்த 2019ஆம் ஆண்டு அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் சின்னதுரைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி எழிலரசி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments