ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன

0 1546

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு டாட்டா, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை முழுவதுமாக வாங்க விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் முதலில் கோரப்பட்டன.

இதையடுத்து அவற்றில் தகுதியுள்ள நிறுவனங்களிடம் இருந்து நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகள் அளிக்கும் காலம் இன்றோடு முடிவடைந்தது.

ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments