திருப்பூர், உடுமலை அருகே வீட்டுக்கு விருந்தாளியாக வந்த பெண்ணிடம் இருந்து நகைகளை திருடிய பெண் மற்றும் பெண்ணின் தம்பி

0 3962

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, தனது வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்த உறவுக்காரப் பெண்ணின் நகைகளை சினிமா பாணியில் திட்டமிட்டு திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கந்தராசு என்பவர் வீட்டில் 11 சவரன் நகைகள் திருடுபோனதாக வந்த புகாரின் பேரில், அவரது வீட்டை ஆய்வு செய்த போலீசார், கதவு உடைப்பு, பீரோ உடைப்பு போன்றவை நடந்ததற்கான அடையாளங்கள் இல்லாததால், குடும்ப நபர்களிடமே விசாரித்தனர்.

சம்பவத்தன்று கந்தராசு வீட்டுக்கு விருந்தாளியாக வந்த உறவுக்காரப் பெண் அணிந்திருந்த நகைகள் மீது ஆசைப்பட்ட கந்தராசுவின் மனைவி லோகேஸ்வரி, அந்த பெண்ணையும், தனது கணவரையும் நைசாக பேசி சினிமாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த உறவுக்காரப் பெண் பாதுகாப்பு கருதி நகைகளை  வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் தனது தம்பி அரவிந்த்குமாருக்கு போன் செய்த லோகேஸ்வரி, வீட்டிலிருக்கும் உறவுக்காரப் பெண்ணின் நகைகளை திருடுமாறும், சந்தேகம் வராமல் இருக்க தனது நகைகளையும் சேர்த்து திருடுமாறும் கூறி வீட்டில் சாவி இருக்கும் இடத்தையும் கூறியுள்ளார்.

அரவிந்த் குமாரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான லோகேஷ்வரியை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments