நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

0 1912

நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் ஆன்லைனில் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

மொத்தமாக 1லட்சத்து51ஆயிரத்து870 இடங்களுக்கு நடக்கும் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க, 1,39,033 பேர் தகுதி பெற்றுள்ளனர். கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 51 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டில் இணைய வசதியை அணுக முடியாத மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் பயின்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 5 கட்டமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments