வீட்டில் அறிவிப்பாணை ஒட்டிய மாநகராட்சி ஊழியர் ; தட்டால் தாக்கிய வீட்டு உரிமையாளர் மனைவி

0 5301
வீட்டில் அறிவிப்பாணை ஒட்டிய மாநகராட்சி ஊழியர் ; தட்டால் தாக்கிய வீட்டு உரிமையாளர் மனைவி


சென்னையில், சொத்து வரி செலுத்தாததால் வீட்டின் முன்பு அறிவிப்பாணை ஒட்டச் சென்ற மாநகராட்சி ஊழியரை வீட்டு உரிமையாளரின் மனைவி தட்டால் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. கொளத்தூர் ராஜன் நகரில் வசிக்கும் மாணிக்கம் என்பவர் 8,496 ரூபாய் சொத்துவரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதற்கான அறிவிப்பாணையை மாநகராட்சி ஊழியரான கோஜம், மாணிக்கத்தின் வீட்டில் ஒட்டிய போது அதனை கிழித்தெரிந்த மாணிக்கத்தின் மனைவி கீதா, மாநகராட்சி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை கோஜம் வீடியோவாக பதிவு செய்வதை கண்டு ஆத்திரமடைந்த கீதா கையில் இருந்த தட்டால் கோஜமைத் தாக்கினார். கோஜம் அளித்த புகாரின் பேரில் கீதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments