யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெட்வதேவ்

0 1858

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் ரஷ்ய வீரர் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நியூயார்க்கில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டெனில் மெட்வதேவை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய மெட்வதேவ் 6-க்கு 4, 6-க்கு 4, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

3 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற நிலையில், யு.எஸ். ஓபன் வெற்றியை எதிர்பார்த்து இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோகோவிச்சின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments