ஒரேநாளில் 28 லட்சத்திற்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டிருப்பது தேசிய சாதனை ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1659
ஒரேநாளில் 28 லட்சத்திற்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டிருப்பது தேசிய சாதனை

தமிழ்நாட்டில், ஒரேநாளில் 28 லட்சத்திற்கும் மேலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பது, தேசிய சாதனை என்றும், இதுவரையில் 4 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பது, இமாலய சாதனை என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மெகா தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்த, மக்கள் நல்வாழ்வுத்துறையை வாழ்த்தி வெளியிட்டுள்ள செய்தியில், வேகமாக செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதுவரையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments