ஆப்கானிஸ்தானில் இயல்பு வாழ்க்கை திரும்புவதாகத் தகவல்

0 1420
ஆப்கானிஸ்தானில் இயல்பு வாழ்க்கை திரும்புவதாகத் தகவல்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியில் தற்போது இயல்பு நிலை மெல்லத் திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் மந்தமான வியாபாரத்தால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பு நிலைமை மேம்பட்டு திருட்டுக்கள் குறைந்துள்ளதாகவும், ஆனால் உண்பதற்கு ரொட்டி கூட கிடைக்கவில்லை என்றும் காபூல் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பல வாரங்கள் மூடப்பட்டிருந்த வங்கிகள் கடந்த 30ம் தேதிதான் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஆப்கனின் 10 பில்லியன் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை வறுமையில் தள்ளிவிடும் என ஐநா எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments