ஆப்கன் அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்க முடியாது - தாலிபான்கள்

0 1804

ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தாலிபான் செய்தித் தொடர்பாளர் சையத் ஜெக்ருல்லா ஹாஷிமி, பெண்களை சமூகத்தின் பாதியாக தாங்கள் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒரு பெண்ணை அமைச்சராக்குவது அவர்களால் சுமக்கமுடியாத சுமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீதிகளில் போராட்டம் நடத்துபவர் ஆப்கன் பெண்கள் அல்ல என்று குறிப்பிட்ட ஹாஷிமி, அவர்கள் மேலும் ஆப்கானியர்களை பெற்றெடுப்பவர்கள் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments